Sunday, 17 March 2013

முத்(த)திரை பதித்த விளம்பரம்! 16+ only.

                                                                                                                                  வயது வந்தோருக்கு மட்டும்.
டேக் ஓகே


                                      ன்றைய உலகை விளம்பரங்கள்தான் ஆட்சி செய்கின்றன. விளம்பரங்கள் இன்றி எதுவும் இல்லை என்றே சொல்லலாம். விளம்பரங்களின் பங்களிப்பால்தான் இன்றைய பொழுதுபோக்கு ஊடகங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் மக்களை மகிழ்விக்கின்றன.

அந்த வகையில் அமெரிக்காவை ஒரு கலக்கு கலக்குகிறது 'சூப்பர் பவுல்' விளம்பரங்கள்.        
ரெடி ஸ்டார்ட் ...
லைட்ஸ் ஆன்...
                                              

வருடம் தோறும் அமெரிக்காவில் நடைபெரும் சூப்பர் பவுல் கால்பந்தாட்ட நிகழ்ச்சி பிரபலமானது. 20 மில்லியன் மக்கள் இந்த விளையாட்டு போட்டியை  டிவியில் பார்க்கிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியில் விளம்பரம் வெளியிட பெரும் போட்டியே நடைபெறும். 20 நொடிகளே வரும் விளம்பரங்களுக்கு பல மில்லியன் செலவழிக்க வேண்டும்.

இந்த சூப்பர் பவுல் நிகழ்ச்சியில் வந்த எந்த விளம்பரம் பெஸ்ட் என்று பெரும் ஆராய்ச்சியே நடைபெறும். அதனால் விளம்பர நிறுவனங்கள் தங்கள் உயிரை கொடுத்து விளம்பரங்களை தயாரிக்கும்.     

இந்த வருடம் வந்த ஆழமான முத்(த)திரை பதித்தது 'GoDaddy'  விளம்பரம்.  தங்கள் நிறுவன இனையத் தளங்கள் செக்ஸியாகவும் பர்பெக்ட்டாகவும் இருக்கிறது என்று காட்ட ஒரு செமையான ஆழமான முத்தக் காட்சியையே நடத்திக் காட்டிவிட்டனர் 'GoDaddy'  நிறுவனத்தினர்.

 இஸ்ரேல்  நாட்டின் செம செக்ஸி சூப்பர் மாடலும், கண்ணாடி போட்ட பம்ளிமாஸ் பரட்டைத் தலை பையனும் கொடுத்துக் கொள்ளும் ஆழமான பிரஞ்சு முத்தமே இந்த வருடத்திய வெற்றிகரமான (?) விளம்பரம்!.  இந்த விளம்பரம் 'சூப்பர் பவுல்' லிஸ்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

இதற்கு முந்தைய 'GoDaddy' விளம்பரங்களில் கூட  மேலாடை நழுவுவதும், ஆடைகளை கலைந்து எறிவதும் என்று  செக்சையே நம்பி ஷூட் செய்திருக்கின்றனர்.
 

'இல்லையென்றால்....யாரும் நாக்கை சப்புக்கொட்டி கொண்டு  பார்க்கமாட்டர்களே....?!'

அந்த உரலி ....
http://videos.godaddy.com/super-bowl-commercials.aspx