Friday, 23 September 2011

தீபாவளி விளம்பரத்திற்குத் தயாராகும் நாளிதழ்கள்.




தீபாவளி சூடு ஏறத்தொடங்கி விட்டது. தலைநகரில் பத்திரிகைகள் போட்டிக் போட்டுக் கொண்டு வியாபர நிறுவனங்களை வளைக்கத்தொடங்கிவிட்டன...?!



ஒவ்வொரு தீபாவளியின் போதும்.... தீபாவளி ரேசில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், டெலிவிஷன் சேனல்கள் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு வேலைசெய்யும். தங்களது ஊடகத்திற்கு விளம்பரங்களைப் பெற பெரும் போட்டியே நடைபெறும்.



ஒரு நிறுவனத்தின் மொத்த விளம்பர பட்ஜெட்டை அதிக அளவில் பெற கடும் போட்டி நிகழும். இதில் அதிக சர்குலேஷன் உள்ள பத்திரிகைள் அதிக அளவில் விளம்பரங்களை தட்டிச் செல்லும். சில நாளிதழ்கள் நல்ல பேக்கேஜை வழங்கி அதிகஅளவில் கல்லாகட்டிவிடும்.



பொதுவாக தீபாவளியின் போது சென்னையில் போத்திஸ், நல்லி, லலிதா ஜூவலரி, ஆரம்கேவி, வசந்த் & கோ., விவேக் & கோ., சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் ஸ்டோர்ஸ், குமரன் சில்க்ஸ், ராதா சில்க்ஸ், சுந்தரி சில்க்ஸ், ஜிஆர்டி போன்ற நிறுவனங்கள் சற்று அதிக அளவில் விளம்பரங்களை வெளியிடும். இதனால் இந்த நிறுவனத்தின் விளம்பரங்களைப் பெற பத்திரிகைகளிடையே  தள்ளுமுள்ளு நடைபெறும்.



மீதி அடுத்தப் பதிவில்.....

2 comments:

  1. Nice to see a very good marketing blog in tamil.. im too a marketing person...
    Thanks from a Goundamani fan

    ReplyDelete
  2. its nice to see a blog like this pls update day to day whom ever able to update this with details to maba so that he can update more informative blog

    ReplyDelete